"மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள்" - திமுகவுக்கு...
போலந்து: காட்டில் கண்டெடுக்கப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் - வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்!
போலந்தில் உள்ள நிசின்ஸ்கா வனப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நாணயங்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வர்த்தக முறையை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
தொல்லியல் ஆய்வாளர் ஹூபர்ட் லெபியோன்கா தலைமையிலான குழுவினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 69 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதில் ஒன்று தங்க நாணயமாகவும், மீதமுள்ள 68 நாணயங்கள் வெள்ளியாலும் ஆனவை என கூறப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் 1633ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட டச்சு தங்க டூகட் (Dutch gold ducat) நாணயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நிசின்ஸ்கா வனப்பகுதியிலிருந்து மரங்கள் மற்றும் வனப் பொருட்கள் டச்சு வர்த்தகர்களுக்கு கப்பல் கட்டுவதற்காக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் பழைய வர்த்தகப் பாதை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது விஞ்ஞானிகள் இந்த நாணயங்களின் அடையாளங்களை விரிவாக ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், புதையல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலுள்ள மண் மற்றும் சாம்பல் அடுக்குகளை ஆய்வு செய்வதன் மூலம் இது எந்தச் சூழலில் புதைக்கப்பட்டது என்பதை கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


















