செய்திகள் :

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: வாக்குவாதத்தில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ் - அமித் ஷா - காரசாரமான விவாதம்!

post image

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து விவாதிக்க இன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இந்த மசோதா 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியபோதே அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், தற்போது 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர்திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தொகுதிகளை அதிகப்படுத்தப் போவதாக மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள், தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தென் மாநிலங்கள் கடுமையாக புறக்கணிக்கப்படும் என்றக் குற்றச்சாட்டுடன் அதை எதிர்க்கின்றன.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்.பி-யுமான அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ``பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? இப்போது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுவிட்டது. நாங்கள் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்துக் கேட்டோம். ஆனால், அதை மிக தந்திரமாக அரசு தவிர்க்கிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்தால், சாதி வாரியான கணக்கெடுப்பு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு என பா.ஜ.க-வின் கொள்கைக்கு எதிரான பிரச்னை எழும்.

அதற்காகவே, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தாமதப்படுத்தி, அதன் முடிவு வருவதற்குள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அவசர அவசரமாக தாக்கல் செய்யப்படுகிறது. நீங்கள் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். கொள்கையளவில் பெண்கள் இட ஒதுக்கீட்டை முழுமனதுடன் ஆதரிக்கிறோம். அதே நேரம், தொகுதி மறு வரையறை மூலம் அதைச் செயல்படுத்துவதை எதிர்க்கிறோம்" என்றார்.

அகிலேஷ் யாதவ்-ன் உரைக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பும் நடத்தப்படும். தற்போது, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்புடன் சேர்த்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடைபெறும் என்று நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், ``தொகுதி மறுவரையறையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செயல்முறையிலிருந்து பிரிப்பதன் மூலம், இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது. எனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம் பெண்களுக்கான விதிகள் அதில் சேர்க்கப்படுவதே அனைவருக்குமான உரிமையாக இருக்கும். எனவே, தற்போது முன்மொழியப்பட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 2023-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, ``மதத்தின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு எந்த விதமான இட ஒதுக்கீடும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.

``முஸ்லிம் மக்கள்தொகை 50 சதவிகித இட ஒதுக்கீட்டு வரம்பிற்கு அப்பாற்பட்டதா? இது எப்படி அரசியலமைப்புக்கு விரோதமானதாகும்? இது குறித்த அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்" என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

அமித் ஷா
அமித் ஷா

அப்போது எழுந்த அமித் ஷா, அகிலேஷ் யாதவ் கேள்விக்கு விளக்கமளிக்காமல், ``சமாஜ்வாதி கட்சி தங்களின் அனைத்துத் தேர்தல் வாய்ப்புகளையும் முஸ்லிம் பெண்களுக்கு வழங்குவதை நாங்கள் தடுக்கவில்லையே..." என்றார்.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலையிட்டு, "உறுப்பினர்கள் இத்தகைய நேரடி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம். அவைநடவடிக்கைகளின்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' - குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்க... மேலும் பார்க்க

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க