செய்திகள் :

"மக்களின் தீர்ப்பே மகத்தானது; துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை.!"- எம்.பி கனிமொழி

post image

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.

ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக எம்.பி கனிமொழியிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், " த.வெ.கவை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். மக்களின் தீர்ப்பே மகத்தானது. அதை மதிக்க வேண்டும். துரதிருஷ்டவஷமாக யாருக்கும் பெரும்பான்மை இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

"பாஜக-வின் ஆசியோடு அதிமுக-விடம் திமுக பேசிக்கொண்டிருக்கிறது" - மாணிக்கம் தாகூர்

தவெக ஆட்சியமைக்க திமுக - அதிமுக இணைகிறது... தவெகவில் இணைந்து திமுகவிற்கு காங்கிரஸ் துரோகம் போன்ற பேச்சுகள்... விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு தன... மேலும் பார்க்க

'மக்களவையில் வேற இடம் கொடுங்க, காங்கிரஸுடன் எங்களால்.!'- மக்களவை சபாநாயருக்கு கனிமொழி கோரிக்கை

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார். வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. பரஸ்பர வரியை 'சட்ட... மேலும் பார்க்க

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் - திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.... மேலும் பார்க்க

'ஆதரவு கோர விரும்பும் அரசியல் தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?'- சிந்தனை செல்வன்

விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க விசிகவிடம் ஆதரவு கோரியிருக்கும் நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? என்று விசிக பொதுச்... மேலும் பார்க்க

தவெக: `விஜய் வளர விடக்கூடாது என்ற நோக்கில், திமுக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்' - எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றக் கேள்வியுடன் தேர்தல் முடிவு வெளியாகி 4 நாள்கள் ஆகியும் தொடர்கிறது. இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்க... மேலும் பார்க்க