செய்திகள் :

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

post image

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்திருந்தது.

ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ மனுதாக்கல் செய்தது. இதனை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரித்து வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதனிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு சார்புடையவராக உள்ளதாகக் கூறி, அவரை வழக்கில் இருந்து விலக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், தற்போது கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், " நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது.

 நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா
நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா

அவர் முன்பு நான் இனி நேரடியாக ஆஜராகவோ, வழக்கறிஞர் வைத்தோ வாதிட மாட்டேன். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று பேசியிருக்கிறார்.

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க

ஈரான்: அணு ஆயுதம் குறித்து பேச தயார்; அதற்கு முன் 'இரண்டு' நிபந்தனைகள் - ஏற்குமா அமெரிக்கா?

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் போது, இஸ்லாமாபாத்திற்கு செல்ல அமெரிக்கா தயாராகவே இருந்தது... மேலும் பார்க்க

FBI: குடிபோதையில் தள்ளாடும் அமெரிக்க FBI இயக்குநர் காஷ் பட்டேல்? குற்றச்சாட்டும் பின்னணியும் என்ன?

அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குனராக இருப்பவர் காஷ் பட்டேல். பணி நேரத்தில் மது அருந்துவதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மட்டுமல்லாது கல்லூரியில் படித்த காலத்திலேயே மது அருந்தி கைது செய்யப... மேலும் பார்க்க