செய்திகள் :

மதுரை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர்?- கைதுசெய்ய கோரி போராட்டம்

post image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார். 

இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருதுநகரில் கிளினிக் வைத்திருந்தவரும், தற்போது மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணிபுரிபவருமான மருத்துவரிடம் சிகிச்சை பெற நேற்று முன்தினம் காலையிலயே பேருந்து மூலமாக வந்துள்ளனர். அப்போது மருத்துவர் வெளியூரில் இருப்பதாக கிளினிக்கில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். 

அப்போது அலைபேசியில் டாக்டரிடம் கேட்டபோது அவர், வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தையை காட்டி சிகிச்சையளித்து விட்டு போகலாம் என காத்திருந்துள்ளனர்.  மாலை டாக்டர் துரைராஜ் கிளினிக்கிற்கு வந்துள்ளார். இளம்பெண் தனது மகனை மருத்துவரிடம் காட்டி சிகிச்சையளித்த பின்னர் மாத்திரை வாங்கி செல்ல மருந்து சீட் எழுதிக்கொடுத்துள்ளார்.

அப்போது இளம்பெண் தனக்கு தோள்பட்டையில் வீக்கம், வலி இருப்பதாக கூறியுள்ளார். 

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

அப்போது மருத்துவர் அறைக்குள் வருமாறு கூறிய நிலையில் இளம்பெண் தாய், தந்தை சென்றபோது மருத்துவர் தாய், தந்தையை வெளியில் போக கூறியுள்ளார். 

அப்போது இளம்பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்த போது  பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டு அழதபடி தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவசர காவல்துறை அழைப்பு எண்ணுக்கு (100) போன் செய்துள்ளனர். அதன்பின் அருகில் இருந்த காவல்துறையினர் வந்துள்ளனர்.

பின்னர் மருத்துவர் துரைராஜ் மீது இளம்பெண் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவர் துரைராஜ் மீது பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பின்னர், வயதை காரணம்காட்டி மருத்துவரை சொந்த ஜாமீனில் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று காவல் நிலையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தியும்  கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலரின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், மருத்துவருக்கு உடந்தையாக காவல்துறை ஆய்வாளர் விமலா இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்களை எழுப்பியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண், " மருத்துவரை கைது செய்யாமல் காவல்துறையினரே  அவரை ஜாமீனில் அனுப்பி வைத்து விட்டனர். எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த மருத்துவரை கைது செய்தால் மட்டுமே இந்த இடத்தில் இருந்து செல்வோம். காவல்துறையினர் மருத்துவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

இதுபோன்று வெளிப்படையாக புகார் அளித்தும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க  தயங்குகிறார்கள். சீனியர் சிட்டிசன் என கூறி மருத்துவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்; சீனியர் சிட்டிசன் ஆக இருந்து கொண்டு இத்தகைய வேலையை செய்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

இது மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. ஒரு காவல்துறையைச் சேர்ந்த குடும்ப பெண்ணுக்கு இதுபோன்று ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால் பெண்கள் பாதுகாப்பு எப்படி உள்ளது என சந்தேகமாக இருக்கிறது. 

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்பதற்காக நாங்கள் வெளிப்படையாக புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி அமைச்சரின் தலையீடு இருக்கிறது" என்றார்

சென்னை: மறுமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஜினீயர் - சிக்கியது எப்படி?

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செ... மேலும் பார்க்க

ஆரணி: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையவர் படுகொலை - மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொடூரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் `கட்டை’ குணா என்கிற குணசேகரன். இவர் மீது வனத்துறையில் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூற... மேலும் பார்க்க

கரூர்: 5 பேர் தற்கொலை விவகாரம்... விவாகரத்து பிரச்னை - அதிர்ச்சி சம்பவத்தின் உருக்கமான பின்னணி

கரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள வாங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் கண்ணன். இவரது தந்தை ராமசாமி (63), தாய் ஜானகி (60), சகோதரி சுகுணா ( 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ப... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து குதித்து பட்டதாரிப் பெண் தற்கொலை; ஓய்வுபெற்ற IAS அதிகாரியின் மகன் கைது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வீன். பட்டதாரியான இவர், சென்னையில் தங்கியிருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் பாலாஜி, சென்னை சோழிங்கநல்லூரில் தங்கியிருக்கிறார். மேலும் இவர், நுங்கம... மேலும் பார்க்க

கரூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை; குடும்ப பிரச்னை காரணமா?!

கரூர் மாவட்டம், சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது: 63). இவரது மனைவி ஜானகி (வயது: 60). இந்த தம்பதியின் மகள் மகள் சுகுணா (வயது: 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவர... மேலும் பார்க்க

`பகையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்; காவல்துறையில் எனக்கு...'- டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆய்வாளர் திலீபன்

பாலியல் குற்றாச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆறுமுகநேரி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த திலீபன், கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். இவர், கடந்த 2023-ம்... மேலும் பார்க்க