உங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைச் சேர்க்க மிகச் சிறந்த வழி எத...
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இளைஞர் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொள்ளையனைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை தெற்கு துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். பட்டதாரி இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் இளைஞரின் பெற்றோரிடம் கடந்த 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள பட்டதாரி இளைஞர் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளி பகுதிக்கு நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ஆட்டேவில் வந்த அந்த இளைஞர் கட்டைப்பையில் துணியை எடுத்துவந்து எரித்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் சொன்னதையடுத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையின்போது பட்டதாரி இளைஞரின் தந்தையிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதும் குறிப்பிடதக்கது.
















