செய்திகள் :

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் அருகே சிறுவன் படுகொலை; ஒரு மாதம் காத்திருந்து வெட்டி கொன்ற கும்பல்!

post image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது கொலை செய்யப்பட்ட சிறுவன் குபேந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியபோது முத்துமணிக்கு  காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த  முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளனர்.

மதுரை சித்திரை திருவிழா

இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நின்றபோது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சராமாரியாக வெட்டியுள்ளனர்.

அப்போது குபேந்திரன் ஓட முயற்சித்தபோதும் விரட்டி வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்துள்ளார். பின்னர் கொலை செய்த கும்பலானது அங்கிருந்து  தப்பியோடியதும் தெரியவந்துள்ளது

வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கார் பார்க்கிங்கில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக  எடுக்கப்பட்ட கடைகளில் சமூகவிரோத கும்பல்களை இரவில் தங்க வைப்பதாகவும் தொடர்ந்து அந்த பகுதியில் மது அருந்துவது போதை பொருட்கள் பயன்படுத்துவது என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் நாள்தோறும் இரவு நேரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

க்ரைம்

எனவே காவல்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அருகே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரையில்  மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங்கில் இளைஞர் வெட்டி படுகொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க