செய்திகள் :

'மன்னிக்க முடியாத குற்றமா?'- பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்தது குறித்து ப்ரீத்தியின் விளக்கம் என்ன?

post image

நடிகர் பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து நடன ஏரியாவில் பெரிய சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.

சில தினங்களுக்கு முன் தன்னுடைய மாஸ்டர்களுக்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார் பிரபுதேவா.

சிறுவயதில் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டு அரங்கேற்றமெல்லாம் செய்திருந்தாலும் பிறகு சினிமா நடனம் என்கிற கட்டத்துக்கு வந்து அதில் பத்ம ஸ்ரீ முதலான தேசிய விருதுகள், ஏன் உலகளவில் கூட சாதனை படைத்து விட்ட பிரபுதேவா, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் தன் மாஸ்டர்களுக்காக  இந்தக் கிளாசிகல் நிகழ்ச்சியை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

’இந்த நிகழ்ச்சியில் அவர் பரதத்தை முறைப்படி ஆடவில்லை, மன்னிக்க முடியாத குற்றம் புரிந்து விட்டார். பாரம்பர்ய கலைகளைத் தவறாக ஆடினால் யாரும் கேட்பார் இல்லையா. இது போன்ற வாய்ப்புகளை பிரபுதேவாவுக்குப் பதில் வேறு இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம்’ என்கிற ரீதியில் நிகழ்வு குறித்துப் பதிவிட்டிருந்தார் நடிகை ப்ரீத்தி.

ப்ரீத்தி சஞ்சீவ்

இவரது இந்தக் கருத்து சினிமா வட்டாரத்தில் பலத்த சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது. நடன இயக்குநர்கள் பலரும் ப்ரீத்திக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபுதேவாவிடம் 13 வருடங்களாக நடனம் கற்று தற்போது நடன இயக்குநராக உருவாகியிருக்கும் நோபிள் மாஸ்டரிடம் இது குறித்துப் பேசினோம்.

நோபல் மாஸ்டர்
நோபல் மாஸ்டர்

’’தன்னுடைய குருவுக்கு அவர் மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி அது. பெரிய இடைவெளிக்கு பிறகு பரதம் ஆடியிருக்கார். அதுல போய் அதே பாவனை இல்ல, மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டார்னு சொல்றதெல்லாம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

யார், யாரைச் சொல்றோம்னும் ஒண்ணு இருக்கு. அவர் இன்னைக்கு சர்வதேச அளவுல இந்திய சினிமாவின் ஒரு அடையாளம். அப்படிப்பட்டவரை இந்த மாதிரி விமர்சனம் செஞ்சது டான்சர்கள் மத்தியில ஒரு கொந்தளிப்பை உண்டு பண்ணியிருக்கு’’ என்றார் அவர்.

இதுபோல் பலரும் ப்ரீத்திக்கு எதிராக வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சர்ச்சைக்கு வித்திட்ட ப்ரீத்தியையே தொடர்பு கொண்டு பேசினோம்.

‘’என்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தேன். அது தொடர்பா யாரும் ஏதாவது கருத்துச் சொல்லியிருக்காங்கன்னா அது அவங்க உரிமை. மத்தபடி இது தொடர்பா எங்கிட்ட நீங்க கேட்டீங்கன்னா என் பதில் நோ கமெண்ட்ஸ்தான்" என முடித்துக் கொண்டார் அவர்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க