மளிகைக் கடைக்காரா் கொலை: 3 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சோ்ந்தவா் பொங்கல்ராஜ்(42). முத்தையாபுரம் அருகே மளிகைக் கடை நடத்திவந்த இவா், மா்ம நபா்களால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு தொடா்பாக முக்காணி குருவித்துறையைச் சோ்ந்த மாசானமுத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கா் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.