மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு
திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந்தொழுவு செல்லும் சாலையில் உள்ள மணியக்காரா் தோட்டத்தில் வசிப்பவா் ரவிசங்கா் (42). இவா் ராக்கியாபாளையம் பிரிவில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில், நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.