‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்...
மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி
டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வாலிபர் சஞ்சல் ரானாவுடன் தொடர்பில் இருந்தார்.
இதனால் சஞ்சல் ரானாவில் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தெரிய வந்ததும் சஞ்சல் ரானாவின் கணவர் ஹிதேஷ் ரானாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக ரானா வீட்டிற்கு ரஞ்சித் சென்றார்.
அங்கு செல்லும்போது ரஞ்சித் தனது தற்போதைய காதலியையும் அழைத்து சென்று இருந்தார். அங்கு இரவில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ரஞ்சித்தையும், அவரது காதலியையும் ரானாவும், அவரது மனைவியும் சேர்ந்து ஹாக்கி மட்டையால் சரமாறியாக அடித்து உதைத்தனர். பின்னர் ரஞ்சித்தையும், அவரது காதலியையும் மூன்றாவது மாடியில் தனி அறையில் அடைத்து வைத்தனர்.

மேற்கொண்டு அடித்து உதைப்பார்கள் என்ற பயத்தில் ரஞ்சித்தும் அவரது காதலியும் அவர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் அதிகாலை 3 மணிக்கு மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இரண்டு பேரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் ரஞ்சித் இறந்து போனார். அவரது காதலி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக போலீஸார் ரானாவைப் பிடித்து விசாரித்தபோது இரண்டு பேரையும் தாக்கியதை ஒப்புக்கொண்டார். தனது மனைவியுடன் ரஞ்சித் தொடர்ந்து தொடர்பில் இருந்ததால் அவரைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரானாவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


















