BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?
'மாஸ்க்', 'மிடில் க்ளாஸ்', எல்லோ' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்களின் விமர்சனங்கள் இங்கே!
இந்த வாரம் கவின், ஆண்ட்ரியா நடித்திருக்கும் 'மாஸ்க்', அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் 'தீயவர் குலை நடுங்க', முனிஸ்காந்தின் 'மிடில் க்ளாஸ்', 'பிக் பாஸ்' பூர்ணிமா ரவியின் 'எல்லோ' ஆகியத் தமிழ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
அத்துடன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சிசு' படத்தின் சீக்வெலான 'சிசு - ரோட் டு ரிவெஞ்ச்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அப்படங்களின் விகடன் விமர்சனங்களை இங்கு பார்ப்போமா...

மாஸ்க்:
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இப்படம். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று சென்னையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள்.
டிடெக்டிவாக இருக்கும் வேலு (கவின்), என்.ஜி.ஓ வைத்திருக்கும் பூமி (ஆண்ட்ரியா), எம்.எல்.ஏ மணிவண்ணன் (பவன்) எப்படி இந்த கொள்ளைக்குச் சம்பந்தப்படுகிறார்கள், இந்த கொள்ளைச் சம்பவத்தை உண்மையாகவே நிகழ்த்தியது யார் என்பதுதான் இந்த 'மாஸ்க்' படத்தின் கதை.
இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவர், ஐடியா என சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் திரைக்கதையில் இந்த 'மாஸ்க்' ஆங்காங்கே சறுக்கியிருக்கிறது.
படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தீயவர் குலை நடுங்க:
எழுத்தாளராக இருப்பவரின் கொலை வழக்கை விசாரிக்க காவல் அதிகாரியான மகுடபதி (அர்ஜூன்) களத்தில் இறங்குகிறார். எழுத்தாளர் எழுதி வைத்த புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை கொலைக் காரணங்களாகக் கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் இவர்.
உண்மையான கொலையாளி யார், எதற்காக கொலை செய்தார் என்பதைச் சொல்கிறது இந்த 'தீயவர் குலை நடுங்க'.
கணிக்கக்கூடிய திருப்பங்கள், டெம்ப்ளேட் திரைக்கதையாலும் பார்வையாளரை இப்படம் சோர்வடையச் செய்கிறது.
படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எல்லோ:
தந்தையின் உடல்நிலை பிரச்னைகளால் குடும்பப் பொறுப்புகள் ஆதிரையை (பூர்ணிமா ரவி) சூழ்ந்துவிடுகின்றன. தந்தையின் பழைய ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இவரை கேரளத்துக்கு பயணப்பட வைக்கிறது.
பயணத்தின் போது சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் இவருடைய ஆசைகளுக்கு உதவுகிறார். இவர்களின் பயணம் எங்கெல்லாம் இவர்களை அழைத்துச் செல்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
ஃபீல் குட் டிராமாவாக நகரும் இந்த 'எல்லோ' திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ஆழமிருந்திருந்தால் பலருக்கும் பேவரிட்டாகியிருக்கும்.
படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மிடில் க்ளாஸ்:
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரல் மார்க்ஸ், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் செட்டிலாக வேண்டும் என்பதே இந்த மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவரின் கனவாக இருக்கிறது.
அப்படியான வேளையில், இவருடைய தந்தையால் இவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால், அது கைகளுக்கு கிடைக்காமல் சில பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது. இறுதியில் அந்த ஜாக்பாட் இவர்களின் கைகளுக்கு கிடைத்ததா என்பதுதான் இதன் கதை.
காமெடி, எமோஷனல் என குழம்பும் திரைக்கதையால் இந்த 'மிடில் க்ளாஸ்' ஓகே மட்டுமே சொல்ல வைக்கிறது.
படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிசு ரோட் டு ரிவெஞ்ச் (SISU - Road To Revenge):
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'சிசு' படத்தின் சீக்வெல்தான் இத்திரைப்படம். இரண்டாம் உலகப் போரில் இறுதியில் இறந்துப் போன தனது குடும்பத்தின் நினைவாக கட்டைகளால் செய்யப்பட்ட அவருடைய வீட்டை தகர்த்துவிட்டு அதை வைத்து வேறொரு இடத்தில் வீடு கட்ட திட்டமிடுகிறார்.
கட்டைகளை எடுத்துச் செல்லும் வேளையில் அடாமி கார்பிக்கு (ஜால்மரி டாமிலா) பழைய எதிரிகளால் பல தடைகளும், பிரச்னைகளும் வருகின்றன.
அதை கடந்து எப்படி மற்றொரு பகுதிக்கு சென்று வீட்டை எழுப்பினார் என்பதுதான் இதன் கதை. வழக்கமான ஆக்ஷன் படங்களின் கதை சொல்லலை தவிர்த்து புதிய திரைமொழிக் கொண்டு சொல்லும் இடத்தில் இந்த 'சிசு' தனித்து நிற்கிறது
படத்தின் முழு விகடன் விமர்சனத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

















