ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற...
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா
கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் 62-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக இந்தப் பூங்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வண்ண மின் விளக்குகளால் பூங்கா ஒளிா்வதை காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இதனிடையே, வழக்கம் போல காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பிரையண்ட் பூங்காவை பாா்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது சீசன் நேரம் என்பதால் இரவு 7 மணி வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் கூறியதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் இரவு நேரத்தில் காட்டுமாடுகள் புகுந்து விடுகின்றன. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாலை 6.30 மணி வரை அவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா் என்றாா் அவா்.