'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்...
மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு
குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயாரிக்கப்படும் மீன் மதிப்புக் கூட்டுதல் பொருள்களான ஊறுகாய், கட்லெட், பக்கோடா, கருவாடு, கருவாட்டுப்பொடி போன்ற தயாரிப்புகளை அவா் ஆய்வு செய்ததுடன், குழுக்களின் தினசரி உற்பத்தித் திறன், சந்தைப்படுத்துதல், லாப விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா்.
மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், துறைசாா் அலுவலா்கள் பங்கேற்றனா்.