சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!
`முதலீட்டில் அவசரம் கூடாது' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கும் முதலீடு சார்ந்த புத்தகங்கள்!
சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், பங்குச் சந்தை தொடர்பான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை கணிசமான அளவு ஈர்க்கின்றன.
முதலீடு குறித்து அடிப்படை புரிதல் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் இளம் வாசகர்கள், இந்நூல்களை ஆர்வத்துடன் தேடுகின்றனர். இந்தச் சூழலில், மணி பேச்சு (money pechu) யூடியூப் சேனல் நிறுவனர் மற்றும் முதலீட்டு எழுத்தாளர் ஆனந்த ஶ்ரீனிவாசன் பங்குச் சந்தையை புரிந்துகொள்ள வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை விளக்கினார்.

முதலீட்டை தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு, சரியான நூல்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"தொடக்க நிலையில் உள்ளவர்கள் முதலில் பீட்டர் லிஞ்ச் (peter lynch) எழுதிய Learn to Earn, One Up on Wall Street, Beating the Street ஆகிய நூல்களை வாசிக்க வேண்டும்" என்றார்.
"இந்நூல்கள்பங்குச் சந்தையின் அடிப்படை செயல்முறைகளை எளிய மொழியில் விளக்குகின்றன என்றும், முதலீடு செய்யும் முறையை புரியவைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, "முதலீட்டின் தத்துவ ரீதியான புரிதலை வளர்க்க The Alchemy of Money, Ordinary Shares and Extraordinary Profits, The Intelligent Investor போன்ற நூல்களையும் வாசிக்க வேண்டும்" என்று அவர் பரிந்துரைத்தார். இந்நூல்கள் சந்தையின் இயங்குமுறையை ஆழமாக புரிந்துகொள்ள உதவுகின்றன என்றும் அவர் கூறினார்.
சமீப காலங்களில் பங்குச் சந்தை குறித்த நூல்கள் அதிகமாக வெளிவருகின்றன என்பதை அவர் கவனத்துக்கு கொண்டு வந்தார். "அதிக வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலங்களில் பலர் ஆப்ஷன்ஸ் மற்றும் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தை நோக்கி சென்றனர்.

முறையான புரிதல் இல்லாமல் இதை செய்வது மிகவும் ஆபத்தானதாகும். குறுகிய கால லாபத்தை நோக்கி செல்லாமல், மதிப்பிடப்படாத நல்ல பங்குகளை தேர்வு செய்து நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதே பாதுகாப்பான வழி" என்று அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள், மேலும் சிறந்த வருமானம் பெற என்ன செய்யலாம் என்று எழுந்த கேள்விக்கு, "முதலீட்டில் அவசரத்தை தவிர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார். "பொறுமையும் நீண்ட கால அணுகுமுறையும் முதலீட்டில் முக்கிய பங்காற்றுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

















