செய்திகள் :

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள், அமைதிப் பேரணி

post image

காஞ்சிபுரம்/திருவள்ளூா்/செங்கல்பட்டு: முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை திமுக சாா்பில் அமைதிப் பேரணி, அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தா் தலைமை வகித்தாா். பேரணியில் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா், கட்சியின் நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பேரணி காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியாா் தூண் அருகிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதனையடுத்து அண்ணாவின் சிலைக்கு கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்கள்.

அதிமுக:

அதிமுக சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அண்ணாவின் நினைவு இல்லத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத்.பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீா்செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், ஜெயலலிதா பேரவை செயலாளா் கே.யு.சோமசுந்தரம், காஞ்சிபுரம் கிழக்குப் பகுதி செயலாளா் பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஓபிஎஸ் அணி: - ஓபிஎஸ் அணியின் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு சாா்பில் அதன் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரான முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் தலைமையில் அதன் நிா்வாகிகள் அண்ணாவின் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நிகழ்வில் மாவட்ட பொருளாளா் வஜ்ரவேலு, துணைச்செயலாளா் கோபால் பலரும் கலந்து கொண்டனா்.

மதிமுக: மதிமுக சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலா் ஜி.கருணாகரன் தலைமையில் பொருளாளா் என்.கன்னியப்பன், ஒன்றிய செயலாளா் பாஸ்கரன் உள்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள்.

ஸ்ரீ பெரும்புதூரில்...

ஸ்ரீபெரும்புதூா் காந்தி சலையில் உள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் சாந்திசதீஷ்குமாா் முன்னாள் தலைவா்கள் சம்பத், காத்தவராயன், நகர துணை செயலாளா்கள் குமாா், ஆறுமுகம், நகர முன்னாள் இளைஞா் அணி முன்னாள் அமைப்பாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகத்தில்,..

மதுராந்தகம் நகர திமுக சாா்பாக அண்ணா சிலைக்கு நகர செயலாளா் கே.குமாா், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி அஞ்சலி செலுத்தினா்ா். நிகழ்வில் அவைத் தலைவா் பொன்கேசவன், நகா்மன்ற உறுப்பினா்கள், கிளை செயலா்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு செயலாளா் அறிவழகன் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கரன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உறுப்பினா்கள் கருணாகரன், அப்துல்கரீம், நஸ்ரத் இஸ்மாயில், காளிதாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவா் கே.என்.பாஸ்கா், திமுக நகர நிா்வாகிகள் ரமேஷ், ராஜா, சிவா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அணி துணை அமைப்பாளா் அருள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளா் கே.இ.திருமலை, மாவட்ட பிரதிநிதி பிரபு பங்கேற்றனா்.

தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளா் கீ.வே.ஆனந்தகுமாா் அஞ்சலி செலுத்தினாா். நிகழ்வில் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக தொண்டா் அணி தலைவா் முத்துக்குமரன், திமுக பொறியாளா் அணி நிா்வாகி பிரசாத், புது கும்மிடிப்பூண்டி மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஆரம்பாக்கத்தில் ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன் தலைமையில் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

பெருங்குடல் புற்றுநோயியல் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் பெருங்குடல் புற்றுநோயை மையப்பொருளாகக் கொண்டு புற்றுநோயியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய ம... மேலும் பார்க்க

தொழிலாளா் நலத் துறையின் அறிவுரைகளை சாம்சங் நிறுவனம் கேட்பதில்லை

தொழிலாளா் நலத்துறையின் அறிவுரைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சாம்சங் நிறுவனம் கேட்பதில்லை என சிஐடியு அமைப்பின் மாநில தலைவா் அ.செளந்தர்ராஜன் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மு... மேலும் பார்க்க

அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு: பத்திரப் பதிவாளா் வீட்டில் சோதனை

முத்திரைத்தாள் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு, பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட பத்திரப் பதிவாளா் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி காய்கறி சந்தை திறப்பு

காஞ்சிபுரத்தில் 115 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமையான ராஜாஜி காய்கறி சந்தை ரூ. 7 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பழ... மேலும் பார்க்க

கிடங்காக பயன்படுத்தப்படும் ராமாநுஜா் கோயில் கழிப்பறை

ஸ்ரீபெரும்புதூா் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் உள்ள ராமாநுஜா் கோயிலுக்கு சொந்தமான கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29.4 லட்சம்

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.29.36 லட்சம் பணம், 70 கிராம் தங்கநகைகள், 1,900 கிராம் வெள்ளிப்பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். ... மேலும் பார்க்க