செய்திகள் :

மும்பை: கர்ப்பிணிக்குச் சிகிச்சையளிக்க தாமதம்; பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்

post image

மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள டோம்பிவிலியில் உள்ள சாஸ்திரிநகர் மருத்துவமனையில், பிரியங்கா (33) என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் குழந்தை வயிற்றில் மாறி இருந்ததால் சிசேரியன் மூலம் குழந்தையைப் பிறக்க செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்கு நியோநேட்டல் தீவிர சிகிச்சை பிரிவு (NICU) படுக்கை தேவையாக இருந்தது.

ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்த அனைத்து படுக்கைகளும் நிரம்பி இருந்தது. எனவே மாற்று படுக்கைக்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய முயன்றபோது சிசேரியனுக்குத் தாமதம் ஏற்பட்டது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் உள்ளூர் சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மாத்ரேயிக்கு தகவல் கொடுத்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்
பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்

அவரிடம் என்.ஐ.சி.யூ (NICU) படுக்கை தேடுவதற்கான மருத்துவக் காரணங்களை விளக்க பெண் மகப்பேறு மருத்துவர் முயன்றார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரமேஷ் மாத்ரே பெண் மருத்துவரைத் தாக்கினார். ரமேஷ் மாத்ரே தாக்குதலைத் தொடங்கிய உடனேயே, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த மற்ற இரண்டு மருத்துவர்களையும், பணியில் இருந்த மூன்று செவிலியர்களையும் கொடூரமாகத் தாக்கினர்.

தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோதே, அந்தப் பெண் மருத்துவர் தனது கைபேசி மூலம் உதவிக்கு அழைக்க முயன்றுள்ளார். மேலும், வன்முறைக் கும்பலைத் தடுக்க அவர் கடுமையாகப் போராடியதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வன்முறையாளர்கள் பெண் மருத்துவரின் கைபேசியைப் பறிக்க முயன்றபோது, அவர் ஒரு மேசைக்குப் பின்னால் சென்று மீண்டும் போனைப் பயன்படுத்த முயன்றார். அப்போது, கவுன்சிலர் பின்னால் இருந்து மிகக் கொடூரமாகத் தாக்கியதில், பெண் மருத்துவரின் கையில் இருந்த போன் கீழே விழுந்தது. அதன் பிறகும் கவுன்சிலர் மற்ற ஊழியர்களையும் தொடர்ந்து தாக்கினார்.

டாக்டர் வைபவ் சாளுகே அளித்த புகாரின் பேரில், விஷ்ணு நகர் போலீசார் சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே உட்பட 5 பேர் மீது மகாராஷ்டிரா மருத்துவ சேவை நபர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மூன்று நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அந்தச் சிசிடிவி காட்சியில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள் மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கியதையும், ஒரு பெண் மருத்துவரைத் தாக்கி அவரது கைபேசியைப் பறித்தததும் பதிவாகி இதுந்தது.

இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மும்பை புறநகர் ரயிலில் இருக்கைக்குத் தகராறு; மிளகுப் பொடியை ஸ்பிரே செய்து சண்டையிட்ட பெண் பயணிகள்

மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் ப... மேலும் பார்க்க

ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இ... மேலும் பார்க்க

`21 ஆண்டில் 25 முறை இடமாறுதல்' - IAS அதிகாரியின் நடடிக்கையால் கலக்கத்தில் பால்பண்ணைகள், உணவகங்கள்

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனராக இருப்பவர் துகாராம் முண்டே. 2005ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான துகாராம் முண்டே, தான் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் துணிச்சலுடன் செயல்ப... மேலும் பார்க்க

வாழ்க்கையை மாற்றிய மகள், மனைவியின் பிறந்தநாள் - அபுதாபியில் மலையாளிக்கு அடித்த ரூ.68 கோடி லாட்டரி!

வாழ்க்கையை மாற்றுவது எது? முடிவில்லாத உழைப்பா அல்லது ஒரே ஒரு தருணத்தில் கதவைத் தட்டும் அதிர்ஷ்டமா? இந்த கேள்விக்கு அபுதாபியில் வசிக்கும் சுனில் குமார் சதாசிவன் என்ற இந்தியரின் வாழ்க்கை இப்போது ஒரு பதி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!

புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்... மேலும் பார்க்க

ஈரோடு: பழைய இரும்பு வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.8 கோடி பணம் - அதிர்ச்சியில் GST அதிகாரிகள்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான செல்வக்குமார் பெருந்துறை அருகில் உள்ள ஈங்கூர் பகுதியில் பழைய இரும்பு வியாபார கடை நடத்தி வருகிறார். வேறு சில தொழில்களும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க