செய்திகள் :

மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

post image

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த மோசடியை மத்திய விசாரணை ஏஜென்சிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மும்பையில் புதிதாக ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியையும், அவரது குடும்பத்தினரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் மோசடி கும்பல் ரூ.1.83 கோடியை அபகரித்துள்ளது.

மும்பை முலுண்ட் பகுதியில் வசிக்கும் அசோக் மகாதேவ் சால்வி(62) என்ற ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குக் கடந்த மாதம் 7 ஆம் தேதி ஒரு பெண் போன் செய்தார். வங்கி அதிகாரியிடம் அப்பெண் உங்களது ஆதார் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டைப் பயன்படுத்தி சட்டவிரோத மற்றும் ஆட்சேபரமான மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் மோசடி
டிஜிட்டல் மோசடி

அதோடு அதற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்பெண் போனை வேறு ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார். அந்த நபர் தன்னை இந்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டார்.

போனில் பேசிய நபர் மும்பை திலக் நகரிலிருந்து சால்வி என்ற பெயரில் சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதோடு ஆதார் கார்டு விபரங்கள் கிரிமினல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரிக்க மும்பை பாந்த்ராவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு அதே நபர் போனை வேறு ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார். அதில் பேசிய நபர் தன்னை குற்றப்பிரிவு அதிகாரி என்று கூறிக்கொண்டார். அதன் பிறகு மற்றொருவர் போனில் வந்து தன்னை டெல்லி சி.பி.ஐ அதிகாரி என்று தெரிவித்தார். அதோடு ஜெயபிரபாகர் என்பவர் போனில் வந்து தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று தெரிவித்தார்.

அவர் வங்கி அதிகாரியிடம், நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்று திறந்து அதனை விற்பனை செய்துவிட்டதாகவும், அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்கும்பல் வீடியோ காலில் வந்தது. அதில் அவர்களது முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் வங்கி அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து ஒரு அறையில் இருக்கும்படியும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தங்களுக்குத் தகவல் கொடுக்கவேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இது ஒரு ரகசிய விசாரணை என்றும் தெரிவித்தனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட் மற்றும் அமலாக்கப்பிரிவு ஆவணங்களையும் அனுப்பி வைத்தனர். அதில் பணமோசடி வழக்கில் சால்வி பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து பயந்து சால்வி தனது குடும்பத்தில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.

ஜனவரி 8 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் குடும்பத்தின் சொத்துகள் மற்றும் சொத்துகளின் விவரங்களைப் பெற்றனர். ஜனவரி 14 ஆம் தேதி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து அனுப்பியது போன்ற ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில் வங்கிக் கணக்கு விவரங்கள் இருந்தன.

சால்வியிடம் இருக்கும் நிதியைத் தாங்கள் அனுப்பி இருக்கும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படியும், அவற்றைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், நிரபராதி என்று கண்டறியப்பட்டால் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

டிஜிட்டல் அரெஸ்ட்

சால்வியும் தன்னிடம் இருந்த பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். அதோடு தனது குடும்பத்து தங்க நகைகள், வைப்புத் தொகை, ஷேர்களை விற்று அல்லது அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தையும் அனுப்பி வைத்தார்.

இப்படியே மொத்தம் ரூ.1.83 கோடியை அனுப்பினார். கடந்த 11 ஆம் தேதிதான் அக்கும்பல் திடீரென சால்வி குடும்பத்தைத் தொடர்பு கொள்வதை நிறுத்தியது. அதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை சால்வி அறிந்து இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு கத்திக்குத்து; என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக தொகுதியில் உள்ள ஒவ்வொ... மேலும் பார்க்க

பகலில் சலூன் கடை ஓனர்; இரவில் போதைப்பொருள் கேங்க் லீடர்! - பிஷ்னோய் கேங்கின் லேடி டான் நேகா

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர... மேலும் பார்க்க

Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.இந்நிலையில், பிரதீப... மேலும் பார்க்க

சென்னை: வீட்டு ஓனரின் மகளை நம்பவைத்து நூதனமுறையில் ஏமாற்றிய அப்பா, மகள் - தங்க நகைகளுடன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர், புனிதாஸ்ரீ (22). இவரின் வீட்டின் கீழ் தளத்தில் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது புனிதாஸ்... மேலும் பார்க்க

"பெண்ணுறுப்பிற்குள் ஊடுருவாமல் விந்தினை வெளியேற்றுவது பாலியல் வன்கொடுமையல்ல" - சத்தீஸ்கர் நீதிமன்றம்

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது. இத்தண்டனையை எதிர்த்து ... மேலும் பார்க்க