செய்திகள் :

மும்பை: விபரீதத்தில் முடிந்த குடும்பச் சண்டை; மகன் கண்முன்னே மனைவியைக் கொன்ற கணவன்; என்ன நடந்தது?

post image

மும்பை முலுண்ட் பகுதியில் வசிப்பவர் ராஜு குப்தா. இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பாவிற்கும், குப்தாவுக்கும் இடையே அடிக்கடி சிறிய சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் சண்டை ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

இது தொடர்பாக புஷ்பா போலீஸில் புகார் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறனர். கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டதில் புஷ்பா தனது மூத்த மகனை அழைத்துக்கொண்டு தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றுவிட்டார். ராஜூ போன் செய்து மும்பைக்கு வரும்படி கேட்டுக்கொண்டபோது வரமுடியாது என்று புஷ்பா கூறிவிட்டார்.

புஷ்பாவின் சகோதரர் கமலேஷ் ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தார். அவர் தனது சகோதரியை அவரது கணவருடன் சமாதானப்படுத்தி சேர்த்து வைப்பதாகக் கூறி மும்பைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் மும்பையில் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து புஷ்பா இது குறித்து மீண்டும் போலிஸில் புகார் செய்துவிட்டு தனது மூத்த மகனையும், கமலேஷையும் அழைத்துக்கொண்டு உத்தரப்பிரதேசம் செல்ல முடிவு செய்தார்.

முதல் கட்டமாக மும்பை அருகில் உள்ள கல்வாவில் இருக்கும் தங்களது உறவினரைப் பார்க்க மூன்று பேரும் புறப்பட்டனர். ஆனால் முலுண்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது கமலேஷ் தனது ஏ.டி.எம். கார்டு மற்றும் ராணுவ அடையாள அட்டை போன்றவற்றை வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராஜுவிற்கு போன் செய்து விசாரித்தார். அங்கு அவை இருப்பதை உறுதி செய்து கொண்டு கமலேஷ் தனது சகோதரியின் மூத்த மகனை மட்டும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

விவாகரத்து கொடுப்பேன் என மிரட்டிய புஷ்பா

புஷ்பா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். வீட்டில் ராஜுவிற்கும், கமலேஷிற்கும் தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் கமலேஷ் மற்றும் மூத்த மகன் என இரண்டு பேரையும் வீட்டு அறைக்குள் போட்டு பூட்டி விட்டு ராஜு தனது இரண்டாவது மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

முலுண்ட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தனது மனைவியிடம் ஊருக்குச் செல்லும் முடிவைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதால் விவாகரத்து செய்யப்போவதாக புஷ்பா தெரிவித்தார்.

இதனால் கோபத்தில் புஷ்பாவை வந்துக்கொண்டிருந்த ரயிலின் முன் தள்ளிவிட்டுவிட்டு தனது மகனுடன் தப்பிச்சென்றுவிட்டார். இதில் புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜுவைத் தேடி வந்தனர். அவர் சூரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரைக் கைது செய்து அழைத்து வந்தனர்.

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள ... மேலும் பார்க்க

150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

கேரளம் மாநிலத்தில் புகழ்பெற்ற மன்னர்களாக விளங்கியவர்கள் திருவிதாங்கூர் மன்னர்கள். திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் இன்றளவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசம் உள்ளது. மன்னர் க... மேலும் பார்க்க

சென்னை: பிரபல ரௌடி என்கவுன்ட்டர் - யார் இந்த `தொப்பை கணேஷ்'?

சென்னை வியாசர்பாடி பிவி காலனி சேர்ந்தவர் டில்லி கணேஷ் என்கிற பிரபல ரௌடி கணேஷ். இவருக்கு தொப்பை இருந்ததால் சக கூட்டாளிகளால் தொப்பை கணேஷ் என அழைக்கப்பட்டார். அதனால் போலீஸ் ரெக்கார்டில் இவரின் பெயர் தொப்... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்; நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் - அலறியடித்த பயணிகள்

நெல்லை மாவட்டம், பாலாமடையைச் சேர்ந்தவர் சுதாகர். இவரும் பக்கத்து ஊரான சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இருவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. ... மேலும் பார்க்க

கோவை: "திமுக ஆட்சியின் அவலநிலை" - பெண் காவலர்களுக்கு பாலியல் வன்கொடுமை; காவல்துறை உயர் அதிகாரி கைது

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணியா... மேலும் பார்க்க