Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!
மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிட்டே பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி.
இருவரும் தங்களது தோட்டத்தில்விளைந்த காய்கறிகளை ஆம்னி காரில் ஏற்றிக்கொண்டு விற்பனைசெய்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
ஃபென்ஜால் புயல்: வெள்ளத்தில் மிதக்கும் புதுவை!
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இரண்டு பேரும் உடனே சுதாரித்துக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கினர். சில நிமிடங்களில் காரில் தீ மளமள என பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.