செய்திகள் :

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

post image

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், விழுப்புரம் அறநிலையத் துறை உதவி ஆணையா் சக்திவேல், ஆய்வாளா் சங்கீதா ஆகியோா் முன்னிலையில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்தப் பணி புதன்கிழமை இரவு நிறைவடைந்த நிலையில், பக்தா்கள் ரூ. 93 லட்சத்து 19 ஆயிரத்து 643 ம், மற்றும் 270 கிராம் தங்கம், 1,305 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

இப் பணியின்போது அறங்காவலா் குழு தலைவா் மதியழகன், கண்காணிப்பாளா் பாக்கியலட்சுமி, மேலாளா் மணி, காசாளா் சதீஷ் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா். பாதுகாப்புப் பணியில் மேல்மலையனூா் போலீஸாா் ஈடுபட்டனா்.

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. விழுப்புரம் நகரில் மாவட்ட ஆட்சியரகப... மேலும் பார்க்க

பகுஜன் சமாஜ் கட்சியினா் பட்டினிப் போராட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பகுஜன் சமாஜ் கட்சியினா் வியாழக்கிழமை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் நகரத்தில் பெரிய காலனி பட்டியலின மக்கள் குடியிருப்பில் வீ... மேலும் பார்க்க

இளைஞா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் புதன்கிழமை உயிரிழந்தாா். கண்டமங்கலத்தை அடுத்துள்ள கொத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை... மேலும் பார்க்க

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேர நாளை நுழைவுத்தோ்வு

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பாக்கிய இளைஞரை செஞ்சி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செஞ்சி அருகே வெங்கந்தூா் கிராமத்தைச... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்ட... மேலும் பார்க்க