சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
மே 15 வரை 32 இந்திய விமான நிலையங்கள் மூடல்!
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகா், சண்டீகா் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 32 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால் மே 10-ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மே 8, 9 ஆகிய தேதிகளில் வான்வழியில் பாகிஸ்தான் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தந்தது.
இதையடுத்து, பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ஸ்ரீநகா், ஜம்மு, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட் உள்பட 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வடஇந்திய மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களுக்கு தங்களால் இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் தெரிவித்தன.