தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிக்க | 'அங்கன்வாடியில் உப்புமா வேண்டாம்; பிரியாணி, சிக்கன் வேண்டும்' - சிறுவனுக்கு அமைச்சர் பதில்!
தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது புரளியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலில் சில தகவல்கள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.