யுஜிசி வரைவு நெறிமுறை: தில்லியில் பிப். 6-இல் திமுக ஆா்ப்பாட்டம்
சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக சாா்பில் பிப். 6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் திமுக மாணவரணி சாா்பில், பிப். 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.
மாணவா் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள் தங்களது துணை அமைப்பாளா்கள் மற்றும் மாணவா் அணியினருடன் பெருமளவு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.