செய்திகள் :

ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டும் பிஷ்னோய் கேங்க்! - பாதுகாப்பு அதிகரிப்பு

post image

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தான். அதோடு சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக்கொலை செய்தனர். இதன் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயன்று வருவதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது.

ரன்வீர் சிங் செயலாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மர்ம நம்பரில் அக்கும்பல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. அதில் பேசி இருப்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் சார்பாக இக்கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். அதில் பல கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடனே ரன்வீர் சிங் வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கின்றனர்.

ரன்வீர் சிங்கும் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறார். ரன்வீர் சிங் மும்பை பிரபாதேவியில் உள்ள பியூ மாண்டே குடியிருப்பு கட்டடத்தில் வசித்து வருகிறார். அக்கட்டடத்தில் திடீரென தனியார் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் நிற்பதாக அக்கட்டட கமிட்டி போலீஸில் புகார் செய்துள்ளது.

கட்டட நிர்வாகத்தின் அனுமதி இன்றி 6 தனியார் செக்யூரிட்டி கார்டுகள் துப்பாக்கியுடன் நிற்பதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் லாபி, ஜிம்னாசியம் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதி போன்ற பொதுவான பகுதிகளில் ஆயுதமேந்திய காவலர்கள் இருப்பது குறித்து அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல்

இது மற்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கக்கூடும் என்று உறுப்பினர்கள் அஞ்சினர் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்றும், அவர்களை பாதுகாப்புக்கு நிறுத்த போலீஸில் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் அக்கட்டிட நிர்வாக கமிட்டி கேள்வி எழுப்பி இருக்கிறது .

அக்கட்டிடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி தீபிகா படுகோனேயும் தங்களது மகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 12க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரமுகர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. அவர்களுக்கு இது தொடர்பாக மிரட்டல் போன் வந்துள்ளது. ஆனால் நடிகர்கள் அது போன்ற நம்பர்களை பிளாக் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய்

ரன்வீர் சிங் செயலாளரும் அது போன்ற நம்பரை பிளாக் செய்திருக்கவேண்டும் என்றும், எனவேதான் அக்கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை பிடிக்கவே போலீஸார் திணறி வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுத்திருக்கும் நபர் தனி நபராக இருக்கவேண்டும் என்றும், அவர் யார் என்பது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும், தனது அடியாட்கள் மூலம் மும்பையில் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்து வருகிறான். இப்போது மும்பையில் மாபியாக்களின் செயல்பாடு குறைந்து இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் முயற்சி செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

நீலகிரி: எகிறும் தங்கம் விலை; சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் பக்கம் திரும்பிய கேரள மாஃபியா கும்பல்!

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கிழக்கிந்திய கம்பெனி மூலம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் ... மேலும் பார்க்க

நடுரோட்டில் இளம்பெண் சுட்டுக்கொலை; விபரீதத்தில் முடிந்த முக்கோணக் காதல்; பெண் கைதான பின்னணி என்ன?

மும்பை கோவண்டி பகுதியைச் சேர்ந்த ஷிபாஷேக் (19) என்ற பெண் தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் தேநீர் அருந்துவதற்காக வெளியில் வந்தார். அப்பெண்ணை யாரோ மர்ம நபர் துப்பாக்கியால் அருகில் இருந்து சுட்டனர்.இ... மேலும் பார்க்க

சென்னை: தாய் தற்கொலை; மருத்துவமனையில் மகன் - வெளிநாட்டிலிருந்து வந்ததும் விபரீத முடிவு!

உத்தரப்பிரதேசம், நொய்டாவைச் சேர்ந்தவர் நீராஜ் ஜெயின். இவர், சென்னையில் டிராக்டர் கம்பெனியில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சோனாலி. இந்தத் தம்பதியினருக்கு கிஷிதிஜ் என்ற மகன் உள்ளார். இ... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா ரூ.4,000 ஃபீஸ்’ - மின்துறை அதிகாரி கையும் களவுமாக கைதானது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டண... மேலும் பார்க்க

ஆந்திரா: திருடிய பணத்தில் சொகுசு கார், வெளிநாட்டுப் பயணம்; வெளியான எஞ்சினியரின் ரகசிய வாழ்க்கை

ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பூட்டை உடைத்து திருட்டு நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்துகொண்டே இருந்தன. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.இது ... மேலும் பார்க்க