Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? - மறுக்கும் செல்வப்பெருந்தகை!
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகக் தகவல் பரவியது.
இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்றும் வதந்தி என்றும் இரண்டு தரப்பினரும் மறுத்துள்ளனர்.

காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளரிடம் இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, "தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நான். எனக்கு இதுவரைக்கும் தகவல் இல்லை," என்று பதிலளித்தார்.
யாரோ சிலர் இப்படிப்பட்ட ஊர்ஜிதப்படாத செய்திகளை வெளியிட்டு தங்களது பெயரை சேர்த்து கொள்ள விரும்புகிறார்கள்.
நான் நேற்று இரவு கூட என்னுடைய இன்சார்ஜ் கிரீஷ் சோடங்கரிடம் பேசினேன். இப்படி எல்லாம் பொதுவெளியில் ஊடகங்களில் வருகிறது என்று, 'எனக்கும் தெரியவில்லை' என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருக்கக்கூடிய பிரவீன் சக்கரவர்த்தி தான் காங்கிரசுக்கும் தி.மு.க-வுக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறார் என்று சொல்லி வந்துள்ளனர். அது ஒருபோதும் உண்மை கிடையாது. உண்மைக்கு புறம்பானது.
எங்களுக்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி, எங்களுடைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் நியமித்திருக்கின்ற தமிழ்நாட்டின் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் சொன்னதுதான் நம்பத்தகுந்த செய்தி. கூட்டணி குறித்து எங்கள் அகில இந்திய தலைமை காங்கிரஸ்தான் முடிவு பண்ணவேண்டும்," எனப் பேசியுள்ளார்.

முன்னதாக மதுரை விமானநிலையத்தில், "திமுக கூட்டணியில் நாங்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். யாரோ வதந்திகளைப் பரப்புகின்றனர்," எனப் பேசியிருந்தார்.
மறுபுறம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், "வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. அப்படி எதாவது இருந்தால் நாங்கள் பொதுவெளியில் தகவல் தெரிவிப்போம். கடந்த இரண்டு மாதங்களாக இதுபோன்ற வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன," என்று கூறினார்.
















