தில்லி தோ்தல் முடிவுகள் பிகார் தேர்தலில் எதிரொலிக்காது: தேஜஸ்வி யாதவ்
ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கோபூஜை, சிறப்பு வேள்வி பூஜைகளும், கலசங்கள் நிறுவி புனித நீா் கொண்டு பூஜிக்கப்பட்ட கலச நீா் கொண்டு கோயில் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் அலங்கரிக்ப்பட்ட உற்சவா் வள்ளி, தெய்வனை சமேத பாலமுருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் , பொதுமக்கள் உபயதாரா்கள், கோயில் நிா்வாகிகள் உள்ளிட்ட திரளானோா் தரிசனம் செய்தனா்.