செய்திகள் :

ராஜஸ்தான்: 170 ஏக்கரில் ரூ.275 கோடி மதிப்பிலான ஓபியம் தோட்டம் - கண்டுபிடித்து அழித்த காவல்துறை

post image

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் செடிகள் வளர்க்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், போலீஸாரும் உதைப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா தாலுகாவில் உள்ள சமோலி, குனா மற்றும் பிப்லி ஆகிய தொலைதூர பழங்குடி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சோதனை நடத்தியதில் சுமார் 170 ஏக்கர் அளவுக்கு சட்டவிரோத ஓபியம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

அதனை பயிரிட்டு இருந்த விவசாயிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அழிக்கப்பட்ட ஓபியத்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.275 கோடி என்று போலீஸார் தெரிவித்தனர். இதே போன்று வேறு யாராவது ஒபியம் பயிரிட்டு இருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். ராஜஸ்தானில் பயிரிடப்படும் ஓபியம் பஞ்சாப்பிற்கு கடத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனை நடத்தியபோது காரில் கடத்தி வரப்பட்ட 6.5 கிலோ ஓபியம் பறிமுதல் செய்யப்பட்டது. அக்காரில் பயணம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப்பில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பஞ்சாப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது.

ஒபியம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

ஓபியம் (Opium) என்பது கசகசா செடியின் (Papaver somniferum) காயிலிருந்து பெறப்படும் ஒரு போதைப்பொருள். இது மருத்துவ ரீதியாகவும், போதைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கசகசா காயின் பால் (Latex) உலர்த்தப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது. இதில் மார்ஃபின் (Morphine) மற்றும் கோடின் (Codeine) போன்ற வலிநிவாரணி வேதிப்பொருட்கள் உள்ளன. கடுமையான வலி நிவாரணியாகவும், இருமல் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இது ஒரு மிகக் கடுமையான போதைப்பொருள். இதற்கு அடிமையானால் உடல் நலம் மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஓபியம் ஹெராயின் தயாரிக்கவும் பயன்படுகிறது.

தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்...'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடி... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டி கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!

மது போதையில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு சாலையோரம் நின்ற அப்பாவிகளை சரமாரியாக வெட்டியது. இதில் வட மாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `எவ்வளவு சொல்லியும் கேட்கல' - திருமணம் மீறிய உறவால் அக்காவை கொன்ற தம்பி

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரும், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள் - தீயிட்டு அழித்த வேலூர் போலீஸ்

வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 18 `குட்கா’ வழக்குகளில் 1,765 கிலோ எடையிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் என்கிறது போலீஸ். இ... மேலும் பார்க்க

மும்பை: விளையாடச் சென்ற இடத்தில் தகராறு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவன்; என்ன நடந்தது?

மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தவர் சித்தார்த்(14). 8வது வகுப்பு படிக்கும் சித்தார்த், தான் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை.அவனது பெற்றோர் பல... மேலும் பார்க்க

`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட... மேலும் பார்க்க