59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ்; `அந்த' 2 எம்.எல்.ஏ-க்க...
ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!
ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார் ரவி. இன்று காலையும் தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ரவி, மனைவியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். மேலும், கல்லை தூக்கி தலையில் போட்டிருக்கிறார். தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டதில் தேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெற்றோரின் இந்தச் செயலால், இரு குழந்தைகளும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

















