செய்திகள் :

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

post image

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு குழந்தைகள் வருவது வழக்கம்.

சிறுமி சாய் தீப்தி
சிறுமி சாய் தீப்தி

மொஹரம் மற்றும் வார விடுமுறையினைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரண்டு குழந்தைகளுடன் செல்வி, தனது தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்துள்ளார். வீட்டில் இரவு குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில் வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு தூங்கி உள்ளனர்.

அதிகாலையில், பார்த்தபோது ஒரு குழந்தையான சாய் தீப்தியைக் காணவில்லை. இதையடுத்து செல்வியும் அவரது தந்தையும் மாயமான குழந்தையை அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கம் தேடி நிலையில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடினர். இந்நிலையில் அந்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்த நிலையில் குழந்தை சாய் தீப்தியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழப்பு
சிறுமி உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே சிறுமி எவ்வாறு உயிரிந்தார் என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர்.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க