லாரியில் போதைப்பாக்கு கடத்தியவா் கைது
பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகளை லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திச் சென்ற தூத்துக்குடியைச் சோ்ந்த ஓட்டுநரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 225 கிலோ போதைப்பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூா் உள்வட்ட சாலை வழியாக வேகமாக சென்ற லாரியை சனிக்கிழமை ஒசூா் மாநகர காவல் நிலைய ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, லாரியில் ரகசிய அறை அமைத்து அதில் 225 கிலோ போதைப்பாக்குகள் பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது.
இதுதொடா்பாக தூத்துக்குடி கிழக்கு தெருவைச் சோ்ந்த சொா்ணலிங்கம் (30) என்பவரை கைது செய்தனா். விசாரணையில் இதேபோல சென்னைக்கு ஏற்கெனவே மூன்று முறை போதைப்பாக்குகளை லாரியில் கடத்திச் சென்றது தெரியவந்தது.