செய்திகள் :

`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்

post image

த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் எனப் பலரும் கோட்டைக்கு படையெடுக்கிறார்களாம்.

அதில் பெரும்பாலோனோர் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களாம். மகிழ்ச்சி மாண்புமிகுவைச் சந்தித்து, 'வாரியத் தலைவர் பொறுப்போ.. இல்ல வேற எதாவது அதிகாரமிக்கப் பொறுப்போ போட்டுக் கொடுங்கண்ணா' எனக் கோரியிருக்கிறார்கள்.

தவெக
தவெக

அவர்களிடம், 'கவலைப்படாதப்பா... உன்னை எம்.எல்.சி ஆக்கிடுறேன்' எனச் சமாளித்து அனுப்பி வைத்திருக்கிறார் மாண்புமிகு. மேலவையை மீண்டும் கொண்டு வர நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. அந்த அனுமதி கிடைக்க வாய்ப்பே இல்லை என விவரமறிந்தவர்கள் சிலர் உண்மையை உடைக்க, இப்போது மீண்டும் மாண்புமிகுவை வட்டமடிக்க தொடங்கிவிட்டனராம் நிர்வாகிகள்.

'எம்.எல்.சி எல்லாம் வேணாம்ணே... வாரியம் ஒதுக்கிக் கொடுங்க' என எக்கச்சக்கமானோர் நெருக்குவதால் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் மகிழ்ச்சி மாண்புமிகு!

சூரியக் கட்சியின் தென்மாவட்ட தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பில் தங்கை தலைவி இருந்தாலும் முழு அதிகாரம் அவர் கைக்கு இன்னும் வரவில்லை. குறிப்பாக, முத்துநகர் மாவட்டத்தின் பெண் மா.செ-வுக்கு தலைவரின் குடும்பத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால், 'தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்' எனத் தங்கை தலைவியிடம் சொல்லிவிடுகிறாராம்.

அந்த பெண் மா.செ தோல்வியடைந்திருக்கும் சூழலில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மா.செ-வை மாற்ற பகிர பிரயத்தனங்களை மேற்கொள்கிறாராம் தங்கை தலைவி. தோல்வி குறித்து ஆராயும் குழுவினரிடம் மா.செ-வுக்கு எதிராக புகாரளிக்க ஆட்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.

தொண்டர்களின் கருத்துகளை கேட்கவரும் குழுவும் தங்கை தலைவிக்கு வேண்டியவர்கள்தானாம். பெண் மா.செ-வை பொறுப்பிலிருந்து தூக்கிவிட்டு மாநகராட்சியின் உச்சப் பொறுப்பில் இருக்கும் அவரது தம்பியை மா.செ-வாக்குவதுதான் திட்டமாம். விஷயமறிந்த பெண் மா.செ கிலியில் இருப்பதாகத் தகவல்.

முந்தைய ஆட்சிகளில் துறைரீதியான டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், மாண்புமிகுக்களுக்கு 'பார்ட்டி பண்ட்' என சில ஸ்வீட் பாக்ஸுகளை கொடுப்பது வழக்கம். ஆனால், த.வெ.க ஆட்சிக்கு வந்தபிறகு பல துறைகளைச் சேர்ந்த ஒப்பந்ததார்களை அழைத்து 'பார்ட்டி பண்ட் தேவையில்லை.

வேலையில் தரத்தை குறைத்துக் கொள்ளாமல் பணிகளைச் செய்யுங்கள்' என்று அமைச்சர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்களாம். மின்சாரத்துறை அமைச்சரான சி.டி.ஆர்.நிர்மல்குமார், 'பணம் சம்பாதிப்பதற்காக இந்தப் பணிக்கு நாங்கள் வரவில்லை. துறையை மேம்படுத்தவும் உங்களது பிரச்னைகள் குறித்து பேசவும் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்.

மற்றபடி, பர்சென்ட்டேஜ் பேச வராதீர்கள்..' என ஒப்பந்ததாரர்களிடம் கூறிவிட்டாராம். 'பர்சென்ட்டேஜ்' வேண்டாம் என ஆளும்தரப்பு சொல்லிவிட்டதை ஸ்மெல் செய்த அதிகாரிகள் படு குஷியில் இருக்கிறார்கள். 'நம்ம பர்சென்ட்டேஜை அதிகரித்து வாங்கிடணும்' என ஆயத்தமாகிறார்களாம்.

த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க இடம்பெறுவதற்கு, ஒரு அமைச்சர் பொறுப்பும் இரு வாரியத் தலைவர் பொறுப்பும் கேட்டிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். முதலில் டீலுக்கு ஒப்புக்கொண்ட த.வெ.க தரப்பு, தற்போது ஒரு வாரியத் தலைவர் பொறுப்பு மட்டும் அளிக்க முன்வந்திருக்கிறதாம்.

அதைத்தொடர்ந்து, 'வாரியத் தலைவர் பொறுப்பை யாருக்கு கொடுக்கப்போகிறார் திருமா...' என்ற பஞ்சாயத்து வி.சி.க-வில் தொடங்கியிருக்கிறது. சிந்தனைச் செல்வன், ஏழில் கரோலின், எஸ்.எஸ் பாலாஜி, திருமாவின் உதவியாளர் தயாளன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களுடன், பல முன்னணி நிர்வாகிகளும் வாரியப் பொறுப்பு கேட்டு வருகிறார்கள்.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

அவர்களுக்கு எந்த வாக்கும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார் திருமா. இந்தச்சூழலில், 'அவரது அக்கா மகள் மாலதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வகிக்கும் முக்கிய பொறுப்பை கேட்டிருக்கிறார் திருமா. அது கிடைக்காதபட்சத்தில் வாரியத் தலைவர் பொறுப்பை மாலதிக்கு கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது' என்று புலம்புகிறார்கள் சிறுத்தைகள்.

தேர்தல் சமயத்தில், 'சென்னை மாநகர காவல் ஆணையர் பொறுப்பிலிருந்தே அருணை மாற்ற வேண்டும்' என த.வெ.க தரப்பில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், த.வெ.க ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொற்பேற்றுள்ளார். கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட எத்தனையோ அதிகாரிகளை 'தி.மு.க ஆதரவாளர்' என முத்திரைக் குதித்தி தட்டிக்கழித்திருக்கிறது ஆட்சி மேலிடம்.

அருண் ஐ.பி.எஸ்
அருண் ஐ.பி.எஸ்

உதாரணமாக, ஐ.ஜி அந்தஸ்திலிருக்கும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி செந்தில்குமாரி சட்டம் ஒழுங்கு பணியில் கைதேர்ந்தவராம். ஆனால், 'அவர் தி.மு.க விசுவாசியாக இருந்தவர்' எனச் சொல்லி டம்மி பதவியில் நியமித்துவிட்டார்களாம்.

லாபி செய்து, லட்டுகளை இறக்கினால்தான் இந்த ஆட்சியில் உயர் பொறுப்புகள் கிடைக்கும் என பொருமித்தள்ளுகிறார்களாம் சீனியர் காக்கி அதிகாரிகள் பலர். 'சிபாரிசு பதவிகளை வாரி வழங்குவதற்கு பெயர்தான் மாற்றமா.. முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தால்தான் சட்டம் ஒழுங்கை காப்பற்ற முடியும்' என வருந்துகிறார்கள் அந்த அதிகாரிகள்.

புதிய ஆட்சி வந்த பிறகு அமைச்சர்களை சரிகட்ட அதிகாரிகள் பலரும் அமைச்சர் அறைகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கின் உதவி பயிற்றுனராக பவனி வரும் கவிதையான அந்த அதிகாரி கடந்த தி.மு.க ஆட்சியிலேயே துணை முதல்வர் பெயரை சொல்லி ஏகத்துக்கும் ஆட்டம் போட்டார். விடுதியில் தங்கியிருக்கும் பெண்களையும் பல விதங்களில் டார்ச்சர் செய்வதாக அப்போதே பலமான புகார் எழுந்தது. மேலிட செல்வாக்கால் தப்பித்து வந்தவர், துறையின் புதிய அமைச்சர் மூலம் பணி நிரந்தரம் வாங்கிவிடும மூடில், அவரின் அறைவாசலிலேயே தவம் கிடக்கிறார். அவருக்கு அமைச்சரின் அடிப்பொடிகள் சிலரும் சத்தமில்லாம் கைகொடுத்து வருகிறார்கள். ஆபத்தை உணராமல் அமைச்சர் ஏதும் செய்துவிடப் போகிறார் என பதறுகிறார்கள் சம்பந்தப்ட்ட துறை அதிகாரிகள்.

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்... மேலும் பார்க்க

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் த... மேலும் பார்க்க

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி ம... மேலும் பார்க்க

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்க... மேலும் பார்க்க

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க