தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!
"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், "நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ``புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது" என்றார்.



















