'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தவெக கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிப்பாளையம் செல்வதற்காக அவர் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்,

"தவெக தலைவர் விஜய் மக்கள் சக்தியாக இருக்கிறார். அவர் தான் நாளைய தமிழகத்தின் முதலமைச்சராக போகிறார். எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்கள் சக்தியாக அவர் அரியணையில் அமர்வார்.
தவெக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. மக்கள் சக்தி மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, ஒரு நேர்மையான ஆட்சியை உருவாக்க புறப்பட்டுள்ளார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது. அவர் ஆண்டுக்கு ரூ.500 கோடி சம்பளம் வந்தாலும், அதை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் புனித ஆட்சியைக் கொண்டுவருவதற்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார். என் உயிர் மூச்சு உள்ளவரை அவர்களுடன் இருப்பேன்.
தவெகவில் ஜனநாயகம் இருக்கிறது. இங்கு யாருடைய படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறேன். விஜய் வாகனம் செல்கிறபோது ஒரு பக்கம் எம்ஜிஆர், மறு பக்கம் அண்ணா படம் இருப்பதை மறந்துவிட வேண்டாம்.

நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகியுள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று சொல்வது சரி இல்லை. அவர்களை மக்களே பார்த்துக் கொள்வார்கள். 3 முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர்." என்றார்.













