விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!
விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாடகர் அறிவு எழுதிய ’சவதீகா’ பாடலை ஆந்தோனி தாசன் பாடியுள்ளார். முன்னதாக, இப்பாடல் யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு ஒருநாளுக்கு முன்னதாக நடிகர் அஜித் குமார் மற்றும் அர்ஜுன் இருக்கும் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“ஒவ்வொரு முயற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும். நாளை முதல் திரையரங்குகளில் விடாமுயற்சி புயல் வீசத் தயாராக உள்ளது. செயலில் விடாமுயற்சியைக் காணுங்கள்” என்று படத் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.