``தேவர்ங்கறது படிச்சு வாங்கின பட்டமா?” - சாதியக் கட்டமைப்பை முகத்தில் அறைந்த பார...
விடைபெற்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா! — இறுதிச் சடங்கு செய்த மகள்
இயக்குநர் இமயம் என போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
பாரதிராஜாவுடைய மகள் ஜனனியிடம், 'தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலை அடக்கம் செய்ய வேண்டும்' கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என நேற்று அவருடைய குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் இறுதி சடங்கிற்கானன் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பண்ணை வீட்டின் முன்புறத்திலேயே உடலை நல்லடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பாரதிராஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 6 மணி அளவில் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்தடைநதது.
மதியம் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டது.
தேனி மாவட்ட மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ராதிகா, நிரோஷா காலையிலேயே வந்து பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே அமர்ந்திருந்தனர். தொடர்ந்து வந்த நடிகர் வடிவேலு பாராதிராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் வன்னிஅரசு, நிர்மல்குமார், நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய்க்குமார், செல்லூர் ராஜூ முன்னாள் எம்.எல்.ஏ - க்கள் கருணாஸ், சரவணன், ஆகியோர் வந்திருந்தனர்.
திரைத்துறையிலிருந்து இயக்குநர்கள் வெற்றி மாறன், பார்த்திபன், ராம், அமீர் ஆர்.கே.செல்வமணி, பொன்ராம், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மதியம் நான்கு மணி அளவில் பாரதிராஜாவின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டது.

அதையடுத்து பாரதிராஜவின் உடல் அடக்கம் செய்யும் கொண்டு செல்வதற்காக தயார் செய்யும் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழ விடுதலைக் கொடியை பாரதிராஜாவின் உடலில் போர்த்தினார் .
தொடர்ந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு பாரதிராஜாவின் மகள் ஜனனி அவருக்கு இறுதி சடங்குகள் செய்தார்.

தொடர்ந்து காவல்துறையினர் பரேட் நடந்தது. அதில் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டனர். மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

















