செய்திகள் :

வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?

post image

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன் மிகக் குறுகலான பகுதி வெறும் 72 செ.மீ அகலம் கொண்டது. அதிகபட்சமாக அதன் அகலம் 122 செ.மீ வரை இருக்கும்.

72 செ.மீ வீடு
72 செ.மீ வீடு
72 செ.மீ வீடு
72 செ.மீ வீடு

போலந்து நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஜாகுப் ஷெஸ்னி, இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் பயன்படுத்தப்படாமல் இருந்த மிகக் குறுகலான இடத்தைப் பார்த்தபோது, அங்கே ஒரு பயனுள்ள கட்டமைப்பை உருவாக்கும் யோசனை அவருக்குத் தோன்றியது. அதன்படி உருவானதுதான் இந்த கெரெட் ஹவுஸ். சுமார் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, பயன்படுத்தக்கூடிய வசிப்பிடமாக வடிவமைக்கப்பட்டது.

வீட்டின் இடம் மிகவும் குறைவாக இருந்தாலும், கிடைக்கும் ஒவ்வொரு செ.மீ இடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறை, சாப்பிடும் மற்றும் அமரும் பகுதி (Dining & Sitting Area), குளியலறை, வேலை செய்யும் இடம் (Workspace), தூங்கும் பகுதி (Sleeping Area) என தேவையான பல வசதிகள் இதில் உள்ளன.

இந்த வீட்டிற்குள் செல்லும் வழியும் வித்தியாசமானது. பிரதான சாலையில் இருந்து நேரடியாக நுழைய முடியாது. அருகிலுள்ள குறுகிய சந்துப் பாதை வழியாகச் சென்று, படிக்கட்டுகள் மூலம் வீட்டுக்குள் செல்ல வேண்டும். வீட்டின் நுழைவாயிலும் வெளியில் இருந்து எளிதாகத் தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடு மூன்று நிலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் நுழைவுப் பகுதி உள்ளது. அடுத்த நிலையில் குளியலறை, சிறிய சமையலறை, அமரும் இடம் மற்றும் வேலை செய்யும் பகுதி அமைந்துள்ளன. மேல்தளத்தில் படுக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறிய இடத்திலும் ஷவர், கழிப்பறை, கண்ணாடி, சேமிப்பிடம் மற்றும் வேலை செய்யும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைலைட் (Skylight) வழியாக இயற்கை வெளிச்சமும் வீட்டுக்குள் வருகிறது.

இந்த திட்டம் இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கெரெட்டுக்காக (Etgar Keret) உருவாக்கப்பட்டது. அவர் இதை வேலை செய்யும் இடமாகவும், அவ்வப்போது தங்கும் இடமாகவும் பயன்படுத்துகிறார். கட்டுமானப் பணிகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2012-ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைந்தன. அதன் பிறகு, வார்சா நகரின் வித்தியாசமான கட்டிடக்கலை அடையாளங்களில் ஒன்றாக இந்த கெரெட் ஹவுஸ் மாறியுள்ளது. பயன்படுத்தப்படாமல் கிடந்த மிகச் சிறிய இடத்தைக்கூட சரியான வடிவமைப்பின் மூலம் பயனுள்ள இடமாக மாற்ற முடியும் என்பதை இந்த வீடு நிரூபித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை ... மேலும் பார்க்க

"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு

சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில... மேலும் பார்க்க

"தினமும் மலை மீது 10 கிமீ ஏறிச்செல்வேன்" - 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்

மகாராஷ்டிராவில் கட்சிரோலி, பண்டாரா, கோண்டியா, தானே, கோலாப்பூர் போன்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மலைப்பகுதிகள் இருக்கின்றன. இந்த மலையில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்... மேலும் பார்க்க

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலைய... மேலும் பார்க்க

5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!

மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நல்துர்க் கோட்டையில் இருந்து 100 அடி பள்ளத்தாக்கில் குதித்து தேசிய அளவிலான பெண் மல்யுத்த வீராங்கனை தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செ... மேலும் பார்க்க