ஆட்டுக்குட்டியை மீட்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுமி - செல்போன் சிக்னலை வைத்து...
வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரில் நேற்று (மே-14)நடைபெற்ற பஞ்சாப் vs மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது பஞ்சாப். சீசனில் முதல் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றியைப் பதிவு செய்து டாப் கியரில் இருந்த பஞ்சாப் அணி, இப்போது தொடர் தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை விட குறைவான வாய்ப்பே இருக்கிறது இந்த அணிக்கு.

மும்பை அணியும் கேப்டன்களை எல்லாம் மாற்றி மாற்றிப் பார்த்தது. முதலில் ஹர்திக் பாண்டியா, அடுத்து சூர்யகுமார் யாதவ், தற்போது ஜஸ்பிரித் பும்ரா. ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்பதுதான் இந்த மாற்றத்திற்கான காரணம். முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வழக்கம் போல பஞ்சாப் ஓப்பனர்கள் பவர் பிளேவைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அதுவரை சரியாக விளையாடாத தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர், தனது பழைய அணியைப் பிளே-ஆஃப் கொண்டு செல்ல வேண்டும் எனத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வந்த வழியே பெவிலியன் அனுப்பி வைத்தனர். அதிலும் குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் நான்கு முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இருந்தாலும், பஞ்சாப் அணியின் எண்ணிக்கை இருபது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எட்டியது.
201 எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணையினர் சிறப்பான தொடக்கத்தை அளித்து, வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தினர். வெற்றி இலக்கை எட்டிவிடலாம் என ஆடிக் கொண்டிருந்த மும்பை பேட்டர்கள், ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்களை விட ஆரம்பித்தனர்.
ஏதாவது ஒரு பேட்ஸ்மேனாவது கிரீஸில் நின்று ஆடிக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என இருந்த நிலையில், திலக் வர்மாவின் 75 (33) என்ற அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது மும்பை அணி. ஆனால், இந்தத் தோல்வியின் மூலம் தனது பிளே-ஆஃப் வாய்ப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது பஞ்சாப் அணி.

இந்தத் தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு, பஞ்சாப் அணியை விட சற்று அதிகமாகவே இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் பஞ்சாப் முடிக்குமா என எதிர்பார்த்த பஞ்சாப் ரசிகர்கள், இப்போது பிளே-ஆஃப் செல்லுமா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.!



















