உபி: 15 வயதில் திருமணம்; 22 வயதில் 5 குழந்தைகள்: ஆண் குழந்தைக்காக 6-வது முறையாக ...
வெறும் 11 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை நான்கு முறை உயர்வு; கிட்டத்தட்ட ரூ.7 உயர்ந்தது!|Timeline
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது.
அன்றிலிருந்தே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை.
கடைசியாக, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை, கடந்த மே 15-ம் தேதி வரைக்குமே அப்படியே தொடர்ந்தது.

ஏன் விலை உயர்வு?
ஈரான் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் உயர்ந்தது. ஆனால், அதற்கேற்ற மாதிரி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
இதனால், தரவுகளின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக ஒவ்வொரு நாளும் ரூ.1,000 கோடி அளவிற்கு நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளன.
இந்த நஷ்டத்தைப் பாதி அளவு குறைக்கவே, தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது எண்ணெய் நிறுவனங்கள்.
நான்கு முறை
இந்திய அரசு கிட்டத்தட்ட 10 நாள்களில் மே 15, மே 19, மே 23, மே 25 என நான்கு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
அப்படி சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எத்தனை ரூபாய் உயர்ந்துள்ளது என்கிற டைம்லைனை இங்கே பார்ப்போம்.
பெட்ரோல் விலை உயர்வு:
மே 15, 2026 - ரூ.103.67 (ரூ.2.87உயர்வு)
மே 19, 2026 - ரூ.104.49 (ரூ.0.82 உயர்வு)
மே 23, 2026 - ரூ.105.31 (ரூ.0.82 உயர்வு)
மே 25, 2026 - ரூ.107.77 (ரூ.2.46 உயர்வு)

டீசல் விலை உயர்வு:
மே 15, 2026 - ரூ.95.25 (ரூ.2.80 உயர்வு)
மே 19, 2026 - ரூ.96.11 (ரூ.0.86 உயர்வு)
மே 23, 2026 - ரூ.96.98 (ரூ.0.87 உயர்வு)
மே 25, 2026 - ரூ.99.55 (ரூ.2.57 உயர்வு)
கடந்த 11 நாள்களில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.6.97 உயர்ந்துள்ளது... டீசல் விலை ரூ.7.1 உயர்ந்துள்ளது.
















