செய்திகள் :

`வெள்ளி, தங்க நிற ஜரிகை பார்டருடன் இலவச சேலை - வேட்டி: முதல்வருக்கு நன்றி" - நெசவாளர்கள் கூட்டமைப்பு

post image

தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், ``நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரவிருக்கும் 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்காகத் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் புத்தாடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்முறை 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற வாக்கிற்கேற்ப, புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம், புதிய அதிக உறுதி மற்றும் தரத்துடன் ஆடைகள் நெய்யப்பட உள்ளன.

கைத்தறி நெசவாளர்கள்
கைத்தறி நெசவாளர்கள்

இத்திட்டத்தின் கீழ் வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டருடன் கூடிய 1,77,64,000 சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் கூடிய புதிய வடிவமைப்பிலான 1,77,22,000 வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

மொத்தம் 642 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.கரிசல் ம... மேலும் பார்க்க

ITR Filing சீசன் இது; இன்னும் ஆதார் - பான் எண்ணை இணைக்கவில்லையா? என்ன, எப்படி செய்யலாம்? | How to

ஆதார் கார்டும், பான் கார்டும் இணைக்க வேண்டும். அப்படியில்லை என்றால், பான் கார்டு செல்லாது என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தல் எப்போது முக்கியமோ, இல்லையோ, இப்போது இதை கட... மேலும் பார்க்க

PF: ரூ.5 லட்சத்திற்கு Auto settlement, 75% பணம் எடுக்கலாம், கூடுதல் வட்டி - EPFO புது அப்டேட் லிஸ்ட்

சமீபத்தில் வருங்கால வைப்பு நிதி வலைதளம் மற்றும் அதன் ஆப்பான UMANG அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட் மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்...> புதிய CITES திட... மேலும் பார்க்க

கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - உயர் நீதிமன்றம்

கரூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ்நதவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசு பணி நியமன ஆணைகளை வழங்கவிருக்கிறார். இந்நிலையில் கரூர் கூட்... மேலும் பார்க்க

`நடுநிலைப் பள்ளிகளில் 0% Dropout Rate; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அபாரம்!' - UDISE அறிக்கை விவரம்

மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் (UDISE) புதிய அறிக்கையில், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும்... மேலும் பார்க்க

சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்... மேலும் பார்க்க