வேன் திருட்டு: இளைஞா் கைது
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் வீட்டில் முன் நிறுத்திவைத்திருந்த வேனை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குந்தாரப்பள்ளியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரது பிக்கப் வேன் அண்மையில் திருடு போனது குறித்து வழக்குப் பதிந்த குருபரப்பள்ளி போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த மணிவண்ணனைக் கைது செய்தனா். மேட்டுப்பாளையம் அருகே மறைத்து வைத்திருந்த செல்வராஜின் வேன் உள்பட நான்கு வேன்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.