செய்திகள் :

"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி

post image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் திருட்டு நடந்துள்ளது என்றும் ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை என்றால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசிலிய மாடல்

அதில் வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண்ணின் புகைப்படங்கள் பல இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பதை ராகுல் காந்தி. சுட்டிக் காட்டியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஹரியானாவின் 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி எனப் பல பெயர்களில் அவரது புகைப்படங்களை வைத்து பல போலி வாக்கு செலுத்தப்பட்டிருக்கின்றன.

ஹரியானா வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி பிரஸ் மீட்
ராகுல் காந்தி பிரஸ் மீட்

இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் எப்படி பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் வந்திருக்கிறார். யார் அவர்?

இன்னொரு பெண்ணுக்கு 100 முறை வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. யார் வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வேறு மாநிலங்களில் இருந்து வந்தும் வாக்களிக்கக்கூட நிலையை உருவாக்கியிருக்கிறார்கள் பாஜகவினர்.

இந்த ஜனநாயகக் குற்றங்களை மறைக்கத்தான் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் நினைத்தால் ஒரு நொடியில் இந்த போலி வாக்காளர் அட்டைகளை நீக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யமாட்டார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து சதி செய்கிறது என்று குற்றம்சாட்டுகிறேன்.

மென்பொருளைப் பயன்படுத்தி இவற்றையெல்லாம் கண்டறிய தேர்தல் ஆணையத்திடம் வலியுறித்தினோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதிலேயே இதற்குப் பின்னால் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது." என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

SIR: ``பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்'' - திமுக என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

SIR பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து திமுக கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

சேலம்: அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்; எம்எல்ஏ அருள் உட்பட 40 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்றைய தினம் சென்ற... மேலும் பார்க்க

`விஜய்யின் அரசியல் மெசேஜ்; திமுகவின் முக்கியப் புள்ளிகளை அட்டாக் செய்த ஆதவ்' - பொதுக்குழு ஹைலைட்ஸ்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசியிருக்கிறார். இந்த சிறப்புப் பொதுக்குழுவின் வழி விஜய் சில அரசியல்... மேலும் பார்க்க

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ஏன் இந்த வரி? உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குற... மேலும் பார்க்க