செய்திகள் :

"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு; பாஜக கண்டனம்!

post image

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 'தி இந்து' நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஹைட்ரா' (HYDRAA) அமைப்பு குறித்துப் பேசினார். அப்போது, ``அடால்ஃப் ஹிட்லருக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'ஹைட்ரா'. யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யக்கூடிய அவரது முக்கியக் குழுவிற்கு 'ஹைட்ரா' என்றுதான் பெயரிடப்பட்டது. ஹிட்லரின் அந்த அமைப்பை உத்வேகமாகக் கொண்டுதான், நான் இந்தத் திட்டத்திற்கு 'ஹைட்ரா' என்று பெயரிட்டேன்" எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த அமைப்பின் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்ச் சேதங்களுடனும் ஒப்பிட்டுப் பேசினார்.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

ஜனநாயக நாட்டின் முதலமைச்சர் ஒருவர், உலகமே வெறுக்கும் ஒரு பாசிச சர்வாதிகாரியைத் தங்களுக்கு உத்வேகம் என்று பொதுமேடையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதோடு, ஜனநாயக சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். உலகம் கண்ட மிகப்பெரிய பாசிசவாதியை பகிரங்கமாக வழிபடும் ஒரு முதலமைச்சரைக் காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.

யாரை வேண்டுமானாலும் கொல்லக்கூடிய ஹிட்லரின் கொடூரமான அமைப்பைத் தனக்கு உத்வேகம் என்று ஒரு முதலமைச்சர் கூறுவது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், "ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துக்கள் காங்கிரஸின் ஆபத்தான ஹிட்லர் மற்றும் அவசரநிலை கால மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. அவசரநிலை முதல் ஹிட்லர் வரை - காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை ஒடுக்கவே நினைக்கிறது. தனது பேச்சுக்காக தெலங்கானா மக்களிடம் ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

தொண்டர்களிடம் ஆவேசமாக உரையாற்றிய பினராயி விஜயன்

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகத் தெலங்கானா அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரா அமைப்பு. ஏற்கனவே பல சட்டவிரோத இடிப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகத் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்கும், சட்டரீதியான ஆய்வுகளுக்கும் உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

``இந்தியாக் கூட்டணியின் கூட்டத்திற்கு திமுக வராததற்குக் காரணம் இதுதான்" - திருமாவளவன் பளீச்

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில்,... மேலும் பார்க்க

``இந்தியாக் கூட்டணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதாம்" - என்ன சொல்கிறார் வைகோ?

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திரா காந்தி டு மோடி வரை; தேசிய அரசியலில் திமுக-வின் கதாபாத்திரம் என்ன? - விரிவான அலசல்

தேசிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பும் அதன் கூட்டணி வரலாறும் இந்திய அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானவை. 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கத்தை முதன்மையாகக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதால... மேலும் பார்க்க

TASMAC: விகடன் செய்தி எதிரொலி... உடனடியாக மூடப்பட்ட முதல்வர் விஜய் தொகுதி டாஸ்மாக் கடை!

விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பள்ளி மற்றும் சர்ச் அருகேயிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் த... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: திமுக-காங்கிரஸ்-க்கு இடையே விரிசல்; அழைக்கப்படாத தவெக! - என்ன நடக்கிறது?

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு, தங்களின் அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடிய... மேலும் பார்க்க