செய்திகள் :

``இந்தியாக் கூட்டணியின் கூட்டத்திற்கு திமுக வராததற்குக் காரணம் இதுதான்" - திருமாவளவன் பளீச்

post image

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில், ``டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியாக் கூட்டணி தலைவர்களின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் எடுத்துள்ள முடிவு கவலையளிக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களிலேயே, தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் இந்தத் தனிச்சன்னிச்சையான முடிவு தி.மு.க-வைப் பெரும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

இதன் காரணமாகவே இன்றைய ‘இந்தியாக் கூட்டணி 'கூட்டத்தை தி.மு.க புறக்கணித்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இருப்பினும், ‘இந்தியாக் கூட்டணி'யுடன் இணைந்து வருங்காலத்தில் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் காங்கிரஸால் தன்னிச்சையாக த.வெ.க-வை அழைக்க முடியாது.

‘இந்தியா’ கூட்டணியின் மூத்த தலைவர்கள் எதிர்காலத்தில் த.வெ.க-வை கூட்டணியில் இணைக்க முடிவு செய்தால், அதை வி.சி.க முழுமனதோடு வரவேற்கும். தமிழகத்தில் அமைந்துள்ள புதிய த.வெ.க அரசு இன்னும் 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்றால் அது அவரின் தனிப்பட்ட அனுமானமாக இருக்கலாம்.

ஆனால், அப்படி நான் கருதவில்லை. மேலும், தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் த.வெ.க அரசு அமையவும், அது ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கவும் ஆதரவு அளித்துள்ளதால், இந்த அரசு தனது ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்.

தற்போது தமிழகத்தில் திமுக தலைமையில் எந்தவொரு மதச்சார்பற்ற கூட்டணியும் இல்லை; விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் என அனைத்துக் கட்சிகளும் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தி.மு.க மட்டுமே தற்போது தனித்து நிற்கிறது. தமிழக அரசியல் களம் புதியதொரு திசையை நோக்கி நகர்வதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன" என்றார்.

``இந்தியாக் கூட்டணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைதாம்" - என்ன சொல்கிறார் வைகோ?

டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திரா காந்தி டு மோடி வரை; தேசிய அரசியலில் திமுக-வின் கதாபாத்திரம் என்ன? - விரிவான அலசல்

தேசிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பும் அதன் கூட்டணி வரலாறும் இந்திய அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானவை. 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கத்தை முதன்மையாகக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: ``மோடி அரசை வீழ்த்த ஒற்றுமை அவசியம்!" - மல்லிகார்ஜுன கார்கே

டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'யின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கிய கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதால... மேலும் பார்க்க

"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு; பாஜக கண்டனம்!

பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற 'தி இந்து' நாளிதழின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஹை... மேலும் பார்க்க

TASMAC: விகடன் செய்தி எதிரொலி... உடனடியாக மூடப்பட்ட முதல்வர் விஜய் தொகுதி டாஸ்மாக் கடை!

விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் பள்ளி மற்றும் சர்ச் அருகேயிருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் த... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணி: திமுக-காங்கிரஸ்-க்கு இடையே விரிசல்; அழைக்கப்படாத தவெக! - என்ன நடக்கிறது?

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு, தங்களின் அடுத்தகட்ட அரசியல் உத்திகளை வகுக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடிய... மேலும் பார்க்க