``காங்கிரஸ் அணுகுமுறையை மாற்ற வேண்டும்" - திருமாவளவன் விமர்சனம்; மாணிக்கம் தாகூர...
நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திருடியது அம்பலம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (73). மூதாட்டியான இவர் தனது வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து கஸ்தூரி கழுத்தில் இருந்த தங்க செயினைப் பறிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் சத்தம் போட்டு கத்த உடனே அவரது மருமகள் சரண்யா வெளியே வந்துள்ளார்.

உடனே, திருட வந்தவன் அங்கிருந்து கருவேலங்காட்டுக்குள் தப்பிச் சென்றார். கஸ்தூரி சத்தமிட்டதால் அக்கம் பக்கத்தினரும் ஒடி வந்துடன் கருவேலங்காட்டிற்குள் சென்று பதுங்கியிருந்த செயின் பறிக்க முயன்றவனைப் பிடித்து வந்தனர்.
பின்னர் லைட் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த போலீஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி(26) என்பதும் தவெக-வில் கிளை கழகப் பொறுப்பாளராக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தில்ஷாத்பேகம் என்ற முதியவரிடம் 14 கிராம் தங்க நகை திருடியதையும் போலீஸரிடம் ஒப்புக்கொண்டார்.
பாரதியிடம் இருந்து அந்த 14 கிராம் நகை மீட்ட போலீஸார் பாரதியை நாகை சிறையில் அடைத்தனர். இது குறித்து சிலரிடம் பேசினோம், பாரதிக்கு 4 அக்கா, 1 தங்கை உள்ளனர். தங்கை சிவரஞ்சனி திருமணம் ஜூன் 17ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் தங்கையின் திருமணச் செலவிற்காகவே பாரதி இந்தத் திருட்டில் ஈடுபட்டுதாக போலீஸில் தெரிவித்துள்ளான். கஸ்தூரியின் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றுள்ளான். அப்போது வீட்டில் அடிக்கடி தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டவன், சில தினங்களுக்கு முன்பும் வீட்டை நோட்டமிட்டு திருட்டில் ஈடுப்பட்டவன் சிக்கி கொண்டான் என்கிறார்கள்.
இதே பகுதியில் கடந்த சில தினங்களாக மோட்டார், ஆடுகள் மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது என்றனர்.



















