செய்திகள் :

கோவை ஈஷா யோக மையத்தில் வாலிபர் மர்ம மரணம்; காவல் துறையின் விளக்கம் என்ன?

post image

விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலாந்துறை காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்பது குறித்து, அந்த மையத்தில் பணியாற்றுபவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈஷா யோகா மையத்தில் கார்த்திக் என்ற சுற்றுலாப் பயணி உயரமான இடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் சிசிடிவி ஆதாரங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில், உயரத்தில் இருந்து குதித்ததால் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவருகிறது.

கார்த்திக்
கார்த்திக்

விசாரணையில் எந்தவிதமான குற்றச் செயலோ அல்லது சந்தேகத்திற்கிடமான சூழலோ கண்டறியப்படவில்லை. கோவையில் ஹிட்டாச்சி இயந்திர ஓடுநராகப் பணியாற்றி வந்த கார்த்திக், சுற்றுலாப் பயணியாக ஈஷா யோகா மையத்திற்கு வந்தபோது தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை நிறைவில் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட காயங்கள் உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப்போவதாக மருத்துவர்களின் முதல் கட்ட  ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திருடியது அம்பலம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (73). மூதாட்டியான இவர் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்ட... மேலும் பார்க்க

திருச்சி: நர்சிங் மாணவி உயிரிழப்பு; தடைசெய்யப்பட மருந்தை பயன்படுத்திய 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம்

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, நர்சிங் கல்லூரி மாணவி சீதாலட்சுமி, கடந்த மாதம் 23-ம் திடீரென இறந்தார். அவரது சாவுக்கு மய... மேலும் பார்க்க

கர்நாடகா: ஆன்லைன் விளையாட்டைத் தடுத்ததால் ஆத்திரம்? - தந்தை, சகோதரியை குத்திக் கொலைசெய்த வாலிபர்!

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள ஹோசா அயோத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாயுடு. இவர் தனது மகனிடம் ஆன்லைன் மொபைல் கேம்களை விளையாட வேண்டாம் என்று கண்டித்தார். இதனால் க... மேலும் பார்க்க

ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில்... மேலும் பார்க்க

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணி... மேலும் பார்க்க