ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஓட்ஸ் அண்டு டேட்ஸ் லட்டு' - வீட்டிலேயே செய்வது எப்படி?
ஓட்ஸ் அண்டு டேட்ஸ் லட்டு
தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப்
கொட்டை நீக்கிய பேரீச்சை – அரை கப்
ஐசிங் சுகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:
அடுப்பைக் குறைவான தீயில்வைத்து ஓட்ஸை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். பேரீச்சையைப் பொடியாக நறுக்கி, பொடித்த ஓட்ஸுடன் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஏலக்காய்த்தூள், ஐசிங் சுகர் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பாலை இக்கலவையில் சேர்த்து ரவா லட்டு பிடிப்பதைப் போல உருண்டைகளாகப் பிடிக்கவும். லட்டுககளை பொடியாக நறுக்கிய பேரீச்சைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஓட்ஸ் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.















