ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `மசாலா மேட் ஆங்கிள்ஸ்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?
மசாலா மேட் ஆங்கிள்ஸ்
தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். அரிசி மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கலவையை சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கலந்து சப்பாத்தி வடிவத்தில் தேய்த்துக்கொள்ளவும். ஒரு முட்கரண்டியால் சப்பாத்தியை ஆங்காங்கே துளையிடவும். அப்போதுதான் பொரிக்கும்போது குமிழ்கள் வராது.
பின்னர் இந்த சப்பாத்தியை சிறிய, சிறிய முக்கோண வடிவங்களாக நறுக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்தவற்றின் மேல் உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.















