சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `வாழைக்காய் மிளகு சிப்ஸ்' வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?
வாழைக்காய் மிளகு சிப்ஸ்
தேவையானவை:
வாழைக்காய் – 2
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வாழைக்காய்களை நன்கு கழுவி தோல் நீக்கி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய காய்களை நன்கு பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த சிப்ஸின் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி நன்கு குலுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
எலும்புகளின் வலுவுக்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் வாழைக்காயில் உள்ளன.














