TNPL-ல் விதிமீறல்... ரஞ்சி வீரருக்கு ₹1 லட்சம் அபராதம்; தொடரிலிருந்து நீக்கம்! ந...
"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" - மாணிக்கம் தாகூர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய தலைமுறை அரசியல்' என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.
"தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
முதன்முறையாக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்று இந்தப் பொறுப்பை அடைய அவர் மேற்கொண்ட கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தியாகங்கள் பாராட்டுக்குரியவை.
59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு.ராஜேஷ் குமார் மற்றும் திரு.விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையின் அங்கமாக இருப்பது பெருமைக்குரிய தருணம்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்று, அதை நேரில் காணும் இந்த வரலாற்றுப் பொறுப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்ற எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் நலனையும், மக்களின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்".
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.
— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 15, 2026
முதன்முறையாக, மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுகிறார். 1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக…















